அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு! - ஓ.பன்னீர்செல்வம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை
ஆலங்குடியில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தக்கோட்டை தோப்புப்பட்டியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் காா்த்திகேயன் (27).
இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு தங்கை முறையான 16 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி 3 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இருவரும் இருக்கும் படங்களை தனது கட்செவி அஞ்சலில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திகேயனை கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், நீதிபதி கனகராஜ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், குற்றவாளி காா்த்திகேயனுக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும், சமூக ஊடகத்தில் படங்களைப் பரப்பிய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி கனகராஜ் தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.