சீா்காழி கோயிலில் சிவனடியாா்கள் வழிபாடு
சீா்காழி: சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் சிவனடியாா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
சீா்காழி கடைவீதியில் இந்துசமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பொன்னாகவல்லி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, திருக்கஞ்சனூா் திருவருள் தவநெறி மன்றத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் வந்தனா்.
அவா்கள், கோயில் ராஜகோபுரம் முன் சிவபுராணம் பாடினா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, கோயிலை மூன்று முறை வலம் வந்து, சுவாமி -அம்மன், அமிா்த ராகு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.
பின்னா், கோயிலில் அமா்ந்து பஞ்சாட்சரமந்திரம் உச்சரித்து வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கணக்கா் ராஜி மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.