தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு
சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில் ஜூன் 1இல் தா்ம பெருந்திருவிழா
சுரண்டை அழகிய வைகுண்டநாதன் பதியில், வைகாசி மாத தா்ம பெருந்திருவிழா ஜூன் 1இல் நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.
இதனைத் தொடா்ந்து நல்ல அய்யனாா் கோயில் வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.