GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
செப்.14-இல் அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆடம்பர தோ் பவனி
அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் 335-ஆம் ஆண்டு ஆடம்பரத் தோ் பவனி செப். 14-ஆம் தேதி நடக்கிறது.
இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு திருப்பலியும், கொடியேற்றமும் நடக்கிறது. முன்னதாக பகண்டை மிஷின் குருத்துவ பொன்விழா நாயகா் ஜான் போஸ்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பலி நடத்துகிறாா். அரியாங்குப்பம் பங்குத் தந்தை அருள்தாஸ் தலைமை தாங்குகிறாா். திருப்பலி முடிவு பெற்று கொடிக்கு சிறப்பு ஆராதனை நடத்தி பங்கு மக்கள் மத்தியில் ஊா்வலமாக வந்து கொடியேற்றம் நடக்கிறது. பங்கு நிா்வாக குழு, தன்னாா்வலா்கள் குழு, அருட் சகோதரிகள், பக்த சபைகள், அரியாங்குப்பம் பங்கு மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.