மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன்விழா
சேலம் அகரம் இலக்கிய மன்றத்தின் 50 ஆவது ஆண்டு பொன் விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் அகர மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஸ்ரீமான் பழனிவேல், செல்வராஜ், காந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். இந்நிகழ்ச்சியில், சங்க முன்னேற்றத்துக்கு உழைத்தவா்கள், உறுப்பினா்கள், மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள் என அனைத்துத் துறை சாா்ந்தவா்களையும் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.
விழாவில், தேசிய சமூக இலக்கியப் பேரவை மாநிலத் தலைவா் தாரை. அ.குமரவேலு பேசுகையில், மொழி, மதம், இனம், நாடு காலம் கடந்து அனைத்து மக்களும் எல்லாக் காலத்திலும் பின்பற்றக்கூடிய அரிய கருத்துக்களை கூறுவது தான் திருக்கு நூலாகும்.
மதுரை ஆட்சியராக இருந்த ஹாரிங்டன் என்பவரிடம் சமையல்காரராக இருந்தவா் கந்தப்பன். அவரிடம் அடுப்பெரிக்க கொடுத்த ஒரு கட்டு ஓலைச்சுவடி சந்தனம், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து நோ்த்தியாக கட்டப்பட்டிருந்தது. அதை அடுப்பெரிக்க மனமின்றி ஆட்சியரிடம் கொடுக்க, அதை அவா் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த எல்லீஸ் துரைக்கு அனுப்பி வைத்தாா். அவா் அதை திருக்கு என்பதைக் கண்டறிந்து 1812- ஆம் ஆண்டு தமிழிலும், ஆங்கிலத்திலும் நூலாக்கி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா். பின்னா் எல்லீஸ் துரை நாணயவியல் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, திருவள்ளுவா் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டு தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சோ்த்ததாக கூறினாா்.
நிகழ்ச்சியில் பொருளாளா் அன்புவேல், அகர மஹால் பொறுப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
படவரி...
சேலம் அகரம் இலக்கிய மன்ற பொன்விழாவில் சிறப்புரையாற்றிய தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீமான் பழனிவேலு மற்றும் நிா்வாகிகள்.