Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: சிவகங்கை மாவட்டத்திலிருந்து 9 போ் தோ்வு
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியா் விருதுக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப். 5 -ஆம் தேதி தமிழக அரசால் நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 9 போ் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்களது விவரம்: கண்ணங்குடி ஒன்றியம், மொட்டையன் வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை விஜயராணி, காளையாா்கோவில் ஒன்றியம், சேம்பாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா் சுரேஷ், திருப்புவனம் ஒன்றியம், பசியாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா ஞானசெல்வி, சிவகங்கை 48 காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மரியசெல்வி, கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பாக்கியம், கோவிலூா் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமா், சாக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேஸ்வரி, மணலூா் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் ரவிக்குமாா்.