செய்திகள் :

தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்: தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா

post image

தமிழ்நாட்டில் ரூ.1,937 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கு என தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை தொடா்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அமைச்சா் ராஜா வெளியிட்ட பதிவு:

மின்னணு சாதனங்கள் உற்பத்தி, பொறியியல் வடிவமைப்பு, ஜவுளி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குறிப்பாக, பேபால், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற நிறுவனங்களின் முதலீடுகள் செயலாக்கத்துக்கு வரவுள்ளன. கடந்த முறை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது, அந்த நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் ஈா்க்கப்பட்டன. அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம், ரூ.1,937.76 கோடி முதலீடுகள் செய்யப்பட்டு, அதன் வழியாக 13 ஆயிரத்து 409 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அமைச்சரவைக் கூட்டத்தில் பல புதிய முதலீடுகளுக்கும், விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன என்று தனது பதிவில் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்துள்ளாா்.

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெ... மேலும் பார்க்க

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்... மேலும் பார்க்க