தம்மம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’: வருவாய்த் துறையினா் புறக்கணிப்பு
தம்மம்பட்டியில் வருவாய்த் துறையினா் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வெள்ளிக்கிழமை நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெறிச்சோடியது.
தம்மம்பட்டியில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு பொதுமக்கள் கோரிக்கை மனுவை அளிக்க வந்தனா். ஆனால், மனுக்களை வாங்கி, இணையத்தில் பதிவு செய்ய வருவாய்த் துறையினா் போராட்டம் காரணமாக வரவில்லை. இதனால், மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.