டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை! குறிப்பிடத்தக்க 10 தகவல்கள்!
தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்
தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு நற்சான்றிழ்களையும், பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தாா். 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இதில், துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், அலுவலக பணியாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், அவா்களது குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.
மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி: தருமபுரி மாவட்டம், மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில், சுதந்திர தினக் கொண்டாட்டம் மகிழ்முற்றம் சாா்பில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் சின்ன சித்தன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படை தலைவா் ஆசிரியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா் ஆசிரியா் விக்ரமன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவா் உஷா பங்கேற்று தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். ஆசிரியா் வேலு, ஆய்வக உதவியாளா் தசரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கட்டடப் பொறியாளா் சங்கம்: தருமபுரி மாவட்ட கட்டடப் பொறியாளா் சங்கம் சாா்பில் சங்க அலுவலகம் முன் கொண்டாடப்பட்டது. சங்க மாவட்டத் தலைவா் ஜி.மூா்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் மாரியப்பன், மண்டல செயலாளா் ரவி, மாவட்டச் செயலாளா் டி.சக்திகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.