செய்திகள் :

"திமுக அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை; இனியும் பேசமாட்டேன்" - அறிவாலயத்தில் வைகோ பாசமழை

post image

'அறிவாலயத்தில் வைகோ'

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசியிருந்தார்.

திமுக - மதிமுக கூட்டணியில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ
வைகோ

'பத்திரிகையாளர் சந்திப்பு'

வைகோ பேசியதாவது, "ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். இந்த திமுக அரசுக்கு எதிராக எந்த பிரச்னையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, பேசவும் மாட்டேன்.

திமுகவுக்குப் பக்கபலமாக இருப்பேன் எனக் கலைஞரின் இறுதி மூச்சுக்குச் சில நாட்களுக்கு முன்பு அவரிடம் கூறினேன். அதை நேற்று கூட மேடையில் பேசியிருந்தேன் என முதல்வரிடம் கூறினேன்.

இந்துத்துவ சனாதன சக்திகள், திராவிட கொள்கைகளைத் தகர்க்கலாம் என நினைத்தால், இமயமலையைக் கூட அசைக்கலாம் திராவிட கொள்கைகளை ஒன்றும் செய்ய முடியாது.

திராவிட இயக்கங்களின் லட்சியங்களும் கொள்கைகளும்தான் என் நரம்பில் ஓடும் குருதி ஓட்டமாக இருக்கின்றன. வருகிற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையாக வென்று ஆட்சியைப் பிடிக்கும்.

வைகோ
வைகோ

கூட்டணி ஆட்சி என்பது எங்களின் நோக்கம் அல்ல. கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்களின் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" என்றார்.

மதிமுகவின் பொதுக்குழுவில் வருகிற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vijay : 'கொடூரமா இருக்கு... இப்படி நடக்கவே கூடாது!' - அஜித் குமாரின் குடும்பத்திடம் விஜய் உருக்கம்!

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். அஜித்தின் தாயிடமும் சகோதர... மேலும் பார்க்க

TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'

சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.Vijayமுன்னதாக, உயிரிழந்த அ... மேலும் பார்க்க

விழுப்புரத்தின் `திமுக முகம்' - பதவியில் இல்லாவிட்டாலும் கோலோச்சும் பொன்முடி!

அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டாலும், தற்போது வரை விழுப்புரத்தின் திமுக முகமாக பொன்முடியே அறியப்படுகிறார். கட்சிப் பதவியில் இல்லாவிட்டாலும் பொன்முடி தலைமையில், `ஓரணியில் தமிழ்... மேலும் பார்க்க

RBI: இந்திய ரூபாய் நோட்டுகள் எதனால் செய்யப்படுகின்றன தெரியுமா?!

சமீபத்திய ஆண்டுகளில் நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இருப்பினும் ஒவ்வொரு நாளும் ரூபாய் நோட்டுகளை கையாண்டு தான் வருகிறோம். ரூ10, 100 ரூபாய் 500 ரூபாய் தற்போது நிறுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

டெல்லி: 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப தடை - என்ன காரணம்?

டெல்லி அரசு சமீபத்தில் பழைய வாகனங்கள் மீது எடுத்த நடவடிக்கை, தலைநகர் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மாநில அரசின் புதிய கொள்கைபடி, 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க