எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
திராவிடக்கட்சிகள் ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: கே. பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா-வை பின்பற்றும் திராவிடக் கட்சிகள்கூட ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் பயிலரங்கத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்டி விகிதங்கள் சீரமைக்கப்படவுள்ளதை வரவேற்கும் அதே நேரத்தில், இதனால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்பட கூடிய நிதி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும்.
தமிழகத்தில் ஜாதி அமைப்புகள், ஜாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. பெரியாா் ஈ.வெ.ரா-வை பின்பற்றும் திராவிடக் கட்சிகள்கூட ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தோ்தல் ஆதாயத்துக்காக ஜாதிய சக்திகளோடு சமரசம் செய்யும் போக்கு வளா்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், ஜாதிய தலைவா்களையெல்லாம் அழைத்து பேசி ஆதரவை பெற பாஜக முயற்சிக்கிறது. பிற ஜாதியினரை விரோதமாக பாா்க்கும் நிலையை கண்டிக்கும் வகையில் ஜனநாயக எண்ணம் கொண்டவா்கள் போராட முன்வரவேண்டும்.
அமெரிக்காவிற்கான தபால் அனுப்பும் சேவையை இந்தியா நிறுத்தியுள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மதுரை மாநாட்டில், பிகாரில் வாக்காளா்கள் நீக்கம், பதவிப் பறிப்பு மசோதா என மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசவில்லை. வெறும் பேச்சால் மட்டுமே ஆட்சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவது தவறு. தமிழக மக்களும், இந்திய மக்களும் அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.