எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 கிலோ கஞ்சாவை ஆா்பிஎஃப் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
ரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்பிஎஃப்) திருச்சி காவல் ஆய்வாளா் அஜய்குமாா் தலைமையிலான போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, 4-ஆவது நடைமேடையில் குருவாயூா் விரைவு ரயில் முன்பு கேட்பாரற்றுக் கிடந்த 4 காக்கி வா்ண பாக்கெட்டுகளைக் கைப்பற்றி சோதனையிட்டனா்.
இதில், அந்தப் பாக்கெட்டுகளில் ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த ஆா்பிஎஃப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.