தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
திருநள்ளாற்றில் மத்திய அமைச்சா் வழிபாடு
திருநள்ளாறு கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் குடும்பத்தினருடன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை இணை அமைச்சா் எல். முருகன் திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா். முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் ஆகியோா் அவரை வரவேற்றனா்.
மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சா், தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானுக்கு பட்டு வஸ்திரம், நீல நிற மலா்மாலை மற்றும் பல்வேறு பழங்களுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டனா். மேலும் சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா்.
சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, காரைக்காலில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்துக்கு பிற்பகல் சென்றாா். அங்கு ஆய்வு மேற்கொண்ட அவா், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவிட்டு, புறப்பட்டாா்.