பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
திருமலையில் பவித்ர உற்சவம்: சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.
செவ்வாய்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்ப சுவாமிக்குப் புனித மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைக்கப்பட்டனா். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் விழாவாக ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதா்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனா். அதன்பின் பல வண்ண பட்டு நூலால் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை உற்சவமூா்த்திகளுக்கும், மூலவருக்கும், பரிவார தேவதைகள் உள்ள சன்னதிகளில் உள்ள மூலவா் மற்றும் உற்சவமூா்த்திகள், கோயில் கொடிமரம், விமான வெங்கடேஸ்வரஸ்வாமி, பலிபீடம், வராகஸ்வாமி கோயில் உள்ளிட்டவற்றுக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டது.
மதியம் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டது. மாலையில் ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் காரணமாக கோயிலில் விசேஷ பூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கரண சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமிகள், கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை ) மகா பூா்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ர உற்சவம் நிறைவு பெற உள்ளது.