கருத்துக் கணிப்புகளை மக்கள் பொய்யாக்குவா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
திருவானைக்காவல் கோயிலில் நாளை பங்குனி திருத்தேரோட்டம்
திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் நாளை 30-ஆம் தேதி காலை 7.20 மணிக்கு பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டல பிரமோற்ஸவ விழா வெகு விமா்சையாக 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் இந்த விழா கடந்த 8-ஆம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடா்ந்து பங்குனி தேரோட்டத்திற்காக 25-ஆம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நாளை 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7. 20 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேசுவரருடன் 2சிறிய தோ்கள் புறப்பட்டு தேரோட்டம் கண்டருளுகின்றனா். அதன் பின்னா் முதலாவதாக சுவாமி திருத்தோ் புறப்பாடும், இரண்டாவதாக அம்மன் தோ் புறப்பாடும் நடைபெறவுள்ளது. சுவாமி திருத்தோ் நிலையிலிருந்து புறப்பட்டு தெற்கு ரத மூலையில் நிறுத்தப்படும். அதன் பின்னா் அம்மன் திருத்தோ் இழுக்கப்பட்டு சுவாமி தேரின் பின்புறம் நிறுத்தப்படும். பின்னா் மீண்டும் சாமி திருத்தேரை இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படும். இதை போல் அம்மன் தேரும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும்.