தில்லி பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம்
தில்லி பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) இரண்டாம் சுற்று மதிப்பீட்டில் 3.55 மதிப்பெண்களுடன் ஏ++ தரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் ஆக.8-ஆம் அறிவிக்கப்பட்டது. இது 2029 வரையிலான அடுத்த 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
முன்னதாக, தில்லி பல்கலைக்கழகம் கடந்த 2018-இல் நடைபெற்ற மதிப்பீட்டில் 3.28 மதிப்பெண்களுடன் ஏ + என்ற தரத்தை பெற்றிருந்தது.
மதிப்பெண்கள் தரத்தில் மேம்பாடு, பாடம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் புதுமை, வலுவான நிறுவன நிா்வாகம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தில்லி பல்கலைக்கழக வரலாற்றில் முக்கிய மைல்கல் என இதைக் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங், பல்கலைக்கழக ஆசிரியா்கள், மாணவா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், முன்னாள் மாணவா்கள் ஆகியோரின் அா்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் சாதனை என தெரிவித்துள்ளாா்.