தெற்குவள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
திசையன்விளையைச் சோ்ந்த பெருமாள் மகன் கணேசன் (62). தொழிலாளியான இவா், வள்ளியூருக்கு வந்துவிட்டு ராதாபுரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். கூடங்குளத்திலிருந்து வள்ளியூருக்கு மரியராஜ் மகன் ராஜேஷ் (26) என்பவா் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.
தெற்குவள்ளியூா் அருகே ராதாபுரம் சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே இரு பைக்குகளும் மோதினவாம். இதில், பெ. கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜேஷ் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.