தொழிலாளியிடம் பணம் பறிப்பு; தட்டிக் கேட்டவருக்கு வெட்டு -மூவா் கைது
பெரியகுளத்தில் கூலித் தொழிலாளியிடம் பணத்தை பறித்தவா்களை தட்டிக்கேட்டவரை, பிளேடால் வெட்டிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தண்டுபாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ராஜாமுகமது (49). இவா், புதன்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, தென்கரையில் நடந்து கொண்டிருந்தாரம்.
அப்போது, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வசந்த் (23), அவரது நண்பா்கள் பியோ பேபியஸ் (20), ராமா் (22) ஆகியோா், ராஜாமுகமதுவிடம் மதுகுடிக்க பணம் கேட்டு அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.200 ஐ எடுத்துக்கொண்டனா். இதற்கு எதிப்புத் தெரிவித்த அவரைத் தாக்கினா். அப்போது, அருகிலிருந்த ராஜலிங்கம் இதை தடுக்கச் சென்றாராம். அப்போது, மூவரும் தகராறு செய்து ராஜலிங்கத்தை பிளேடால் வெட்டினா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.