மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணி...
நாகா்கோவில் இடா்தீா்த்த பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
நாகா்கோவில், வடிவீஸ்வரம் இடா்தீா்த்த பெருமாள் திருக்கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில், கடந்த 2007ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு பின்னா் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இதை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
5ஆம் நாளான வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மூலஸ்தானம் பெருமாள், சிவன், அம்பாள், மூலவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத இடா்தீா்த்த பெருமாள், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ, தமிழ்நாடு உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், குமரி மாவட்ட திருக்கோயில்களின் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியம், ஸ்ரீ லிஜா, அகஸ்டினா கோகிலவாணி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

