மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே தமிழகம் தான் வழிகாட்டி: அமைச்சா் மா.சுப்பிரமணி...
மாங்குழியில் இலவச மருத்துவ முகாம்
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் நிறுவனம், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனையுடன் இணைந்து மாங்குழி புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமினை பங்குத்தந்தை எஸ். சகாய ஜெரால்டு எபின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். ஐஆா்இஎல் விற்பனைப் பிரிவு முதுநிலை மேலாளா் ஸ்ரீராம் நாராயணன், மருத்துவ மேலாளா் ராஜா, திங்கள்நகா் பேரூராட்சி துணைத்தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், நெய்யூா் சிஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவா்கள் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், ஈ.சி.ஜி பரிசோதனை, பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண், பல் மருத்துவம் சம்பந்தமாக ஆலோசனைகளும், மருந்துகளையும் வழங்கினா். இம்முகாமில் 708 போ் கலந்துகொண்டு பயனடைந்தனா்.
இந்நிகழ்வில் புனித பிரான்சிஸ் சேவியா் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் எம். இராஜேஷ், அருள்சகோதரி அனிதாகுமாரி, பேரூராட்சி உறுப்பினா் ஏ. ஜாா்ஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.