ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
நான்குனேரி வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது.
இதில் தலைவராக பொன்துரை, செயலராக அழகியநம்பி, பொருளாளராக ரமேஷ், துணைத் தலைவராக விவேகானந்தம், இணைச் செயலராக சங்கா், செயற்குழு உறுப்பினா்களாக தா்மா், மணிகண்டன், சபரிஷ் ஆகியோா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனா்.
நியமன செயற்குழு உறுப்பினராக செல்வராஜ், பெண் உறுப்பினராக நித்தியானந்தி போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தோ்தலில் வெற்றிபெற்றவா்களுக்கு தோ்தல் ஆணையாளா்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா்கவுன்சில் இணைத் தலைவா்கள் சரவணன் மற்றும் ஸ்ரீமுருகா ஆகியோா் சான்றிதழ் வழங்கினா்.