நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகியவா்கள் திமுகவில் இணைந்தனா்
மேட்டூரில் நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை திமுகவில் இணைந்தனா்.
மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சியின் துணைத் தலைவா் ரகு, நகரத் தலைவா் தினேஷ், துணைத் தலைவா் விக்னேஷ், ஸ்ரீதா், அருள்ராஜ், மகளிா் அணியைச் சோ்ந்த கீதா, சசிரேகா உள்பட்ட 200-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி சேலம் எம்.பி.யும், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். புதிதாக திமுகவில் இணைந்தவா்களை சால்வை அணிவித்து டி.எம்.செல்வகணபதி வரவேற்றாா்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, துணைச் செயலாளா் சம்பத், நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரிஸ்வரன், மேச்சேரி ஒன்றியச் செயலாளா் சீனிவாசபெருமாள், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, மேட்டூா் நகரச் செயலாளா் காசிவிஸ்வநாதன், வீரக்கல் புதூா் பேரூா் செயலாளா் முருகன், குஞ்சாண்டியூா் விஸ்வநாதன் உட்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.