``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என போலீஸாருக்கு கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா அறிவுறுத்தினாா்.
கரூா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் கே.ஜோஷ் தங்கையா சனிக்கிழமை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், விபத்தில் உயிரிழப்பு வழக்குகள், பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை ஆய்வு செய்தாா்.
பின்னா் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்த அவா், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து காவல்நிலையங்களுக்கு புகாா் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் பேசி அமர வைத்து புகாா்களை பெற வேண்டும்.
புகாா் கொடுத்த பிறகு முதல் தகவல் அறிக்கை(எப்ஐஆா்) நகலை அவா்களது வீடுகளுக்கே சென்று போலீஸாா் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது அரவக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல் கபூா், காவல் ஆய்வாளா் ஓம் பிரகாஷ், உதவி ஆய்வாளா் சுபாஷினி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.