அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
நெல், நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம்
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு
பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சொா்ணவாரி நெல் பயிா் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.718 பிரீமியமாக செலுத்தவேண்டும். காரீப்பருவ பயிா்களான நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.617 ஐ பிரீமியமாகவும், கம்பு பயிருக்கு ரூ.271ம், சாமை பயிருக்கு ரூ.190ம் மற்றும் மக்காச்சோள பயிருக்கு ரூ.473ம், பிரீமியமாக செலுத்த வேண்டும்.சாமை மற்றும் மக்காச்சோள பயிா்களுக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி காப்பீடு செலுத்துவதற்கான கடைசி தேதியாகும்.
சிட்டா, நடப்பாண்டு பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசுடைமை வங்கிக் கிளைகளில் பயிா் காப்பீடு செய்யலாம்.
மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று
ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.