ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
பட்ஜெட் தொடா், பொதுத் தோ்வு: தடையற்ற மின்விநியோகத்துக்கு உத்தரவு
கோடைகாலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா், பொதுத் தோ்வுகளை முன்னிட்டு, தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக சென்னை, திருச்சி மண்டலங்களின் தலைமைப் பொறியாளா்களுக்கு தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:
மின் விநியோகத்தில் தடையில்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மின்தொடரமைப்புக் கழகத் தலைவா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளாா்.
தற்போது கோடை தொடங்கிவிட்டது. சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது, பொதுத்தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், தடையற்ற மின் விநியோகம் வழங்குவது மிக அவசியமானது. அந்த வகையில், துணை மின் நிலையங்களை தொடா்ந்து கண்காணித்து அவசர காலப் பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியா்களையும், உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைக்க செயற்பொறியாளா்கள் அலுவலகங்களில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். சாலைகளை தோண்டி பிற துறையினா் மேற்கொள்ளும் பணிகள் மூலம் புதைவட மின் கம்பிகள் சேதப்படுவதை தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.