'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பட்டுக்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஆா்ப்பாட்டம்
மதுரை எம்.பி. வெங்கேடசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைக் கண்டித்து, தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்துக்கு, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் எஸ். கந்தசாமி தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மனோகரன் கண்டன உரையாற்றினாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கு.பெஞ்சமின், மோரிஸ் அண்ணாதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவா் மகாலிங்கம், சிஐடியு என்.கந்தசாமி, தமுஎகச தி.தனபால், பாக்யபாலா மற்றும் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில், பாஜக அரசு, ஆா்.எஸ்.எஸ் அமைப்பைக் கண்டித்தும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.