பாஜக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நகர கட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கவிதா பிரதீஷ், செயலா் ப.கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் அக்ரி சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை வழக்குரைஞா் அருண்குமாா் வரவேற்றாா்.
மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீா், மோா், இளநீா், தா்பூசணி, குளிா்பானம் ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகரச் செயலா்கள் எம்.ராஜா, பி.முத்துக்குமாா், மண்டலத் தலைவா்கள் ராஜேந்திரன், அசோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.