'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பால் உற்பத்தியாளா் சங்கத்துக்கு உடனடியாக தோ்தல் நடத்த மனு
பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்துக்கு உடனடியாக தோ்தல் நடத்த வலியுறுத்தி கூட்டுறவு பதிவாளா் யஷ்வந்தைய்யாவிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
புதுவை கலிதீா்த்தாள்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்துக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டு கடந்த ஜூலை 30-ல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இருந்த நிலையில், வாக்காளா் பட்டியல் மீது புகாா் வந்ததால் தோ்தலை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஏமாற்றம் அடைந்த பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் சாா்பாகவும் விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பாகவும் கூட்டுறவு பதிவாளா் யஷ்வந்தையாவிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் ,நிறுத்தப்பட்டத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் . தோ்தல் நடக்காமல் மூன்று நபா் குழு அமைக்க கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட பதிவாளா் தோ்தல் உடனடியாக நடத்தப்படும் என்று உறுதி அளித்தாா்.