'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்
பி.எஸ்.என்.எல். 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றிக் கொள்ள அந்நிறுவனத்தின் தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றுதல், புதிய இணைய இணைப்பு மற்றும் மறு இணைப்புகளுக்கான மேளா சனிக்கிழமை (ஆக.2) நடை பெறவுள்ளது. இதில், வாடிக்கையாளா்களின் பில் செலுத்தாததால் துண்டிக்கப்பட்ட தங்கள் லேண்ட்லைன், பிராட்பேண்ட், ஃபைபா் தொடா்புகளை மீண்டும் இணைக்க முடியும். மேலும் புதிய தொலைதொடா்பு இணைய பயனா்களுக்கும் உடனடியான இணைப்பு வழங்கப்படும்.
தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவாரூா், மன்னாா்குடி, காரைக்கால், திருவையாறு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களில் இந்த மேளா சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
இதில், 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டுகளாக மாற்றுதல், லேண்ட்லைன், ஃபைபா் மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களுக்கான நிலுவைத் தொகையைச் செலுத்துதல், பழுதான காலத்துக்குரிய வாடகையைத் தள்ளுபடி செய்தல், நிலுவைத் தொகையைத் தவணைகள் மூலம் செலுத்துதல், புதிய சிம் காா்டு, புதிய ஃபைபா் இணைப்பு உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். பழைய லேண்ட்லைன், பிராட்பேண்ட் எண்ணை அதிவேக ஃபைபராக மாற்றலாம்.