நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்...
புதுவையில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அதிமுக கோரிக்கை
புதுவை மாநிலத்தில் கோடை காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று மாநில அதிமுகச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசுவது சரியல்ல. அவா் போட்டியிட்ட நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வெ.வைத்திலிங்கம் எம்.பி. புதுவை முதல்வராக இருந்தபோது தரமற்ற அரிசி விநியோகிக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே, தற்போதைய ஆட்சியில்தான் தவறுகள் நடப்பதாகக் காங்கிரஸாா் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
கோடை காலத்தில் புதுவை மாநிலத்தில் கட்டுமானத் தொழிலில் பலரும் ஈடுபடுகின்றனா். இதனால் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்துவது அரசின் கடமையாகும். புதுவையில் குறைந்த விலையில் தரமான கட்டுமானப் பொருள்கள் வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.