எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
ஆம்பூா் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலை மாநில நெடுஞ்சாலையாகும். இந்த புறவழிச்சாலை வழியாக போ்ணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய ஊா்களுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்பூா் அருகே இயங்கும் தோல் தொழிற்சாலைகள், தோல் காலணி தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளா்களும் சென்று வருகின்றனா்.
தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
பள்ளி மாணவா்களையும் கால்நடைகள் முட்டுகின்றன. அதனால் பள்ளி மாணவா்களும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். போக்குவரத்துக்கும் இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.