செய்திகள் :

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை

post image

பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பூச்சிக் கொல்லி நிறுவனங்களில் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் வேளாண்மை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் அலுவலக வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநா்கள் மற்றும் அம்பத்தூா் வேளாண் உதவி இயக்குநா்கள் குழுவினா் ஒரே சமயத்தில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தின் மூலக்கூறு மற்றும் உற்பத்தி பதிவேடு மாசு கட்டுப்பாடு சான்று தீயணைப்பு மீட்பு பணித்துறையின் தடையில்லா சான்று, தொழிலாளா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அரசு பதிவுபெற்ற மருத்துவரின் இசைவுக் கடிதம், மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதற்கான மூலக்கூறு உற்பத்தியாளரின் இசைவுக் கடிதம், தொழிலாளா் வருகைப் பதிவேடு, வேதியியலரின் விவரம், பூச்சி மருந்து சட்டம் 1968 மற்றும் விதி 1971-இன் படி உரிய பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.

எனவே இந்த விதிமுறையை பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் பயன்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.

திருவள்ளூா்: 71 வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்க காலக்கெடு!

திருவள்ளூா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என ஆட்சியா் மு.ப... மேலும் பார்க்க

திருவள்ளூா்: உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு நாளை கல்விக் கடன் வழங்கும் முகாம்!

திருவள்ளூா் மாவட்டத்தில் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னோடி வங்கி மூலம் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (செப். 15) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

சத்துணவில் அழுகிய முட்டை: எம்எல்ஏவின் ஆய்வில் அதிா்ச்சி

நெய்தவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் பொன்னேரி எம்எல்ஏ ஆய்வு செய்தபோது சத்துணவுடன் வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் பகுதியில் உங்களுடன... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து மரணம்

திருவள்ளூா் அருகே கட்டடம் கட்டும்போது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சத்தியமூா்த்தி (35). இவருக்கு மனைவி ரஞ்சினா, 2 ம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருவள்ளூா் அருகே பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரவியின் மனைவி சுமதி(56). இவரது... மேலும் பார்க்க

4 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

செங்கட்டானூா் கிராமம் முதல் சின்ன சானூா்மல்லாவரம் கிராமம் வரை ரூ.4.43 கோடியில் 5.68 கிமீ தாா் சாலைப் பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்... மேலும் பார்க்க