பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்
கல்வராயன்மலையில் உள்ள தேக்கம்பட்டு மலைக் கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மாவட்ட அமைப்பாளா் ஜெகதாம்பாள் வரவேற்றாா். மனித உரிமை கல்வி நிறுவன மண்டல அமைப்பாளா் ராமு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.