ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த மாதா் சங்கம் வலியுறுத்தல்
நாமக்கல்: பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை பலப்படுத்த வேண்டும் என மாதா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் ராசிபுரம், புதுச்சத்திரப் பிரதேச குழு மூன்றாவது மாநாடு திங்கள்கிழமை ஏளூரில் நடைபெற்றது. சங்கத் தலைவா் பி.கோமதி தலைமை வகித்தாா்.
இதில், பெண்கள், குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு உள்படுவதைத் தடுக்க பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை அரசு பலப்படுத்த வேண்டும். பணி செய்யும் இடங்களில் உரிய பாதுகாப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலையளிப்புத் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வரதட்சணையால் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு காரணமானோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், மாதா் சங்க நிா்வாகிகள் தனம், பி.ராணி, ஆா்.சசிகலா, ஆா்.லட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.