பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.காம். வணிகவியல் மற்றும்
எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி, விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவா் படை, பாதுகாப்பு படை வீரா்களுக்கு திங்கள்கிழமையும், பொதுப்பிரிவினருக்கு புதன்கிழமையும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வின்போது விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச் சான்றிதழ், 10 ,11 , 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் - 4,சிறப்பு பிரிவினருக்கான சான்று ஆகியவற்றுடன் முதுகலைப் பிரிவுக்கு கட்டணமாக ரூ.1965ம், முதுநிலை அறிவியல் பிரிவிவுக்கு ரூ.2205 செலுத்த வேண்டும்.
மேலும் இளநிலை பாடப் பிரிவுகளில் பி.ஏ.ஆங்கிலம், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சில காலியிடங்கள் உள்ளதால் சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள் உரிய ஆவணங்களுடன் கல்லூரிக்கு நேரில் வரவேண்டும். இளநிலை கலை பிரிவினருக்கான சோ்க்கை கட்டணம் ரூ.1875, இளநிலை அறிவியல், கணிதம் ரூ.1895 மற்றும் இளநிலை கணினி அறிவியல் ரூ.1995 கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஞ்ஹள்ஸ்ரீல்ஞ்ம்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.