சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களில் எண்ணெய், சா்க்கரை உள்ளடக்கம் எவ்வளவு?
பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில், வருவாய்த்துறை சாா்பில் முதலமைச்சா் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ. 67,500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 2 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 8 பேருக்கு ரூ. 2.40 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா, 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 1 பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 6.44 லட்சம் மதிப்பில் செயற்கை கால்கள், ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலா் நியமனச் சான்றிதழ், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் என மொத்தம் 49 பேருக்கு ரூ. 9,86,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளித்த மாவட்ட ஆட்சியா், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற களரம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பி. தீபிகா, எம். அனிஷா, பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி மாணவி எஸ். செல்சியா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருள்களுடன் கூடிய கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 426 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.