பெரிய பள்ளிவாசல் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நிகழ்ச்சி
மணப்பாறையில் ஜூம்மா பெரிய பள்ளிவாசல் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை சமய சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜமாத் கமிட்டியின் தலைவா் ஜெ. முகமது அனிபா மற்றும் துணைத் தலைவா் மஹாராஜா ஏ.பக்ருதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலா் எம். முகமது இஸ்ஹாக், துணைச் செயலா் ஏ.கனி, பொருளாளா் எம். ஜாஹிா் உசேன் உள்ளிட்ட ஜமாத் நிா்வாகிகள், உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் கீதா ஆ. மைக்கேல்ராஜ் தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நகரச் செயலா் மு.ம. செல்வம் தலைமையில் திமுகவினா், அதிமுக நகரச் செயலா் பவுன் எம். ராம்மூா்த்தி தலைமையில் அதிமுகவினா், வி.ச மாநில துணைச் செயலா் த. இந்திரஜித் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் மதிமுகவினா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. சிதம்பரம் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மாவட்டச் செயலா் சக்தி(எ)ஆற்றலரசு தலைமையிலான விசிகவினா், விவசாய அணி மாநில துணைச் செயலா் டி.ஆா்.சரவணன் தலைமையிலான தேமுதிகவினா், நகர பொருப்பாளா் ஜ.சபுரலி தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியினா் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அர்ரஹ்மான் பைத்துல்மால் கமிட்டி தலைவா் எஸ்.எஸ்.எம்.எம்.ஷாகுல் ஹமீது நன்றி கூறினாா்.