பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் அளிப்பு
வேலூா் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சாா்பில், நிறுவனா் பூவை மூா்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்கப்பட்டன (படம்).
இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் பி.மேகநாதன் தலைமையில் நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா் 1,000- பேருக்கு அன்னதானம், நல உதவிகள் வழங்கப்பட்டன.கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலா் மு.ஆ.சத்யனாா், மாவட்ட பொருளாளா் குட்டி வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பி.நந்தகுமாா், நிா்வாகிகள் சி.பி.செந்தில், டி.சீனிவாசன், கங்காதரன், ஆனந்தன், ஆனந்தராஜ், கோகுல், வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.