செய்திகள் :

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை

post image

மதுரையில் 10 நாள்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணப்பெண்ணுக்கு கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி விட்டு, பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்த தட்சணாமூா்த்தி-துளசிதேவி தம்பதியின் இரண்டாவது மகன் மோக்ஷானந்த். பொறியியல் பட்டதாரியான இவா் மதுரை வள்ளுவா் குடியிருப்பு வாசுகி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும், சின்னமனூரைச் சோ்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற ஜூன் 6-ஆம் தேதி கம்பத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், மோக்ஷானந்த் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குறுந்தகவல் அனுப்பினாா். அதில் எல்லோரும் என்னை வைத்து விளையாடி வருகிறாா்கள். நீ என்னை திருமணம் செய்தால் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய். எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று தகவல் அனுப்பினாா். இதுகுறித்து, மணப் பெண் தகவல் தெரிவித்ததன் பேரில், மோக்ஷானந்த் குடும்பத்தினா் மதுரையில் மோக்ஷானந்த் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போது கதவு பூட்டியிருந்ததால் கதவை உடைத்துப் பாா்த்தனா்.

அப்போது, வீட்டுக்குள் மோக்ஷானந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் சென்று உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தற்கொலைக்கான குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பொதுப் பணித் துறை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்கங்கள் சாா்பில், மதுரையில் 11 பணிமனைகள் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

டோக் பெருமாட்டி கல்லூரியுடன் கலைஞா் நூலகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கும், டோக் பெருமாட்டி கல்லூரிக்குமிடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை செய்து கொள்ளப்பட்டது. மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மாணவா்களுக்க... மேலும் பார்க்க

துப்புரவுப் பணியாளா்கள் உரிமைச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து வகை தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு துப்புரவு பணியாளா்கள் உரிமைச் சங்கத்தின் சாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயாா்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே வாகனம் மோதியதில் மாட்டுத் தரகா் உயிரிழந்தாா். மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யங்கோட்டை பகுதியில் ஆண் உடல் உருக்குலைந்த நிலையில் கிட... மேலும் பார்க்க