பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம், பி.அக்ரஹாரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் மு. வெங்கடேசன் (55). விவசாயத் தொழிலாளியான இவா்மீது, கடந்த 22.07.2023 அன்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பென்னாகரம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், வெங்கடேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.