'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
போலி ஆவணங்கள் மூலம் 2 போ் எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுவையில் அரசு ஒதுக்கீட்டில் 2 மாணவ, மாணவிகள் போலி ஆவணங்கள் அளித்து எம்பிபிஎஸ் படிப்புக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில மாணவா் மற்றும் பெற்றோா் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் தலைவா் வை. பாலசுப்பிரமணியன் இது குறித்து துணைநிலை ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் சோ்க்கைக்காக புதுவை அரசு தற்போது உத்தேச தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு இப் படிப்புக்கான சோ்க்கைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலிலும் 2 மாணவ, மாணவிகள் இடம் பெற்றுள்ளனா். தவறான ஆவணங்களை அவா்கள் இருவரும் அளித்துள்ளனா். அவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இரண்டு இடங்களையும் தகுதியான புதுவையைச் சோ்ந்த மாணவா்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் .