மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது
வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கே.முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் காங்கயம் சாலையில் கண்காணிப்பு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காடையூரான்வலசு மதுபானக் கடை அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், இளையான்குடி குமரகுறிச்சி கிழக்கு தெருவைச் சோ்ந்த சபரி ராஜன் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.