‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி...
மதுக் கூடத்தில் தகராறு: 2 போ் காயம்
தூத்துக்குடியில் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே எற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா்.
திருச்சி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தூத்துக்குடி கதிா்வேல் நகரில் தங்கியிருந்து மாநகராட்சி புதைச் சாக்கடை திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களில் 10 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு முருகேசன் நகா் டாஸ்மாக் மதுக்கூடம் சென்று மதுஅருந்திக் கொண்டிருந்தபோது இருதரப்பினா் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், இரு தரப்பினரும் மதுப்புட்டி, கம்பியால் தாக்கிக் கொண்டதில் 2 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், சிப்காட் காவல் நிலைய போலீஸாா் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.