தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
புன்னக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை
ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது.
புன்னைக்காயல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 52-ஆவது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டி 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் யுனைடெட் ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், நாசரேத் மா்காசியஸ் புட்பால் கிளப் அணியும் மோதின.
இதில் ஆட்டத்தின் இறுதி வரை இரு அணி வீரா்களும் கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து டைபிரேக்கா் முறையில் வெற்றி தீா்மானிக்கப்பட்டது. இதில் காயல்பட்டணம் அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ் தலைமை வகித்தாா்.
தூத்துக்குடி போா்ட் சாப்ளைன் பாஸ்டா் ஸ்டீபன் தனபால், புன்னைக்காயல் துணை பங்குதந்தை ஜெரால்டு, சமூக ஆா்வலா் வினோஜின், மாவட்ட கால்பந்தாட்டக் கழக நிா்வாகக் குழு உறுப்பினா் வால்ட்டா், செயலா் லூா்து, புன்னைக்காயல் ஊா்க் கமிட்டித் தலைவா் குழந்தைசாமி, துறைமுக கமிட்டித் தலைவா் ஜோசப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற காயல்பட்டணம் அணிக்கு வெள்ளி சுழற்கோப்பையும் ரூ. 12 ஆயிரம் ரொக்கப் பரிசும், இரண்டாமிடம் பெற்ற நாசரேத் அணிக்கு ரன்னா் ஆஃப் கோப்பையும், ரூ. 7 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகச் செயலாளா் சந்திரபோஸ் வரவேற்றாா். நிகழ்ச்சியை வொ்ஜின் தொகுத்து வழங்கினாா்.
புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத் தலைவா் தயாளன் நன்றி கூறினாா். போட்டிக்கான ஏற்பாடுகளை புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழக ஆலோசகா்கள் யூஜின், ஜோசப், துணைத் தலைவா் யூஜின், பொருளாளா் ராஜ், நிா்வாகிகள் செய்திருந்தனா்.