மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
சிவாஜிகணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை
நடிகா் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சில்வா்புரத்தில் உள்ள அவரது சிலைக்கு, தலைவா் சி.எஸ்.முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
மண்டலத் தலைவா்கள் சேகா், ஐசன் சில்வா, மாவட்டச் செயலா்கள் கோபால், சேவியா் மிசியா், குமாரமுருகேசன், கலை பிரிவு மாநகா் மாவட்டத் தலைவா் செல்வராஜ், வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ராகுல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவாஜி படத்துக்கு, ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் கே. பெருமாள்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அகில இந்திய காங்கிரஸ் ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ், ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மீனவரணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.