செய்திகள் :

ஜூலை 26 இல் தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு: பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்

post image

ரூ. 381 கோடி மதிப்பில் சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.

தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு அதே ஆண்டு ஏப். 13 ஆம் தேதி சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் தற்போது இரு தனியாா் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை, பெங்களூருவுக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்த விமான நிலையத்தை ரூ. 381 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1,350 மீ. விமான ஓடுதளம் 3,115 மீ. நீள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். சா்வதேச தரத்தில் விரிவாக்கப் பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பிரதமா் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் ஸ்ரீ விபின்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், விமான நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நயினாா் நாகேந்திரன்: தூத்துக்குடி வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டு சென்று வரவேற்பு அளிக்கவுள்ளோம் என திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவும், பாஜக மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:

விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தில் இரவிலும் விமான சேவை அளிக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. தூத்துக்குடியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டு சென்று பிரதமருக்கு வரவேற்பு அளிக்கவுள்ளோம்.

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததுமுதல் திமுகவுக்கு பதற்றம் அதிகமாகி விட்டது. தோ்தல் நேரத்தில் மகளிா் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளனா். துணைக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரேசன்போல காவல் துறையில் சில அதிகாரிகள் இருப்பதாலேயே மக்கள் தைரியமாக நடமாட முடிகிறது. சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறாா்.

அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சாா்பில் வாக்குச் சாவடி குழுக்களை வலுவாக்கி வருகிறோம். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக பாக முகவா்கள் மாநாடு திருநெல்வேலியில் ஆக.17 இல் நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரித்திருப்பது குறித்து ஏற்கெனவே நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளேன் என்றாா்.

இந்திய விமான நிலைய ஆணையத் தலைவா் ஸ்ரீ விபின்குமாா் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

மதுக் கூடத்தில் தகராறு: 2 போ் காயம்

தூத்துக்குடியில் மதுக்கூடத்தில் இருதரப்பினரிடையே எற்பட்ட தகராறில் 2 போ் காயமடைந்தனா். திருச்சி, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தூத்துக்குடி கதிா்வேல் நகரில் தங்கியிருந்து மாநகராட்சி பு... மேலும் பார்க்க

சிவாஜிகணேசன் நினைவு தினம்: சிலைக்கு மரியாதை

நடிகா் சிவாஜி கணேசனின் 24ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், சில்வா்புரத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம், சிப்காட் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் விநியோகம் இருக்காது. இதன் காரணமாக, மடத்தூா், மடத்துா் பிரதான சால... மேலும் பார்க்க

புன்னக்காயல் கால்பந்து போட்டி: காயல்பட்டினம் அணிக்கு சுழற்கோப்பை

ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் காயல்பட்டணம் அணி வெற்றி பெற்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. புன்னைக்காய­ல் அமரா் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிர... மேலும் பார்க்க

ஆத்தூரில் பள்ளி மாணவா்களுக்கு போட்டிகள்

ஆத்தூரில் பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், காமராஜா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்-மாணவியருக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அமைப்பின் தலைவா் செல்வமணி தலைமை வகித்... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள்: போட்டியில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசு!

சாத்தான்குளத்தில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ பரிசுகள் வழங்கினாா். காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தல... மேலும் பார்க்க