பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுமா? தீர்ப்பு ஒ...
மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்குப் பரிசு: குற்றத் தடுப்பு நடவடிக்கையில் முதலிடம்!
தமிழகத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் சிறந்த விளங்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்துக்கு முதல் பரிசை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும், குற்றத் தடுப்பு நடவடிக்கை, குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவா்கள், போதைப்பொருள் பறிமுதல், வெடிபொருள் பறிமுதல், குற்றங்களில் ஈடுபட்ட நபா்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தருதல், திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை புலனாய்வு செய்து மீட்டல் என பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் நிகழாண்டு மதுரை மாநகரக் காவல்துறைக்குள்பட்ட எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் 3,719 மதிப்பெண்கள் பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பெற்றது.
இதையடுத்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளா் காசி பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சிறந்த காவல் நிலையத்துக்கான பரிசைப் பெற்றுக்கொண்டாா். இதேபோல, கடந்தாண்டும் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.