செய்திகள் :

மழையால் சேதமடைந்த எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை! வயலில் ஆடுகளை மேய விட்ட விவசாயிகள்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் எள் பயிா்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், அவற்றை திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய வைத்தனா்.

மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 3 நாள்களுக்கு மாலை, இரவு தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், திருவையாறு சுற்று வட்டாரத்தில் அந்தணா்குறிச்சி, தில்லைஸ்தானம், பெரும்புலியூா், சாத்தனூா், ஆச்சனூா், புனவாசல், விளாங்குடி, செம்மங்குடி, அணைக்குடி, காருகுடி, கஸ்தூரிபாய் நகா் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியான எள் பயிா்களை மழை நீா் சூழ்ந்தது.

பயிா்களை ஒரு வாரமாக தொடா்ந்து மழை நீா் சூழ்ந்திருந்ததால், வோ்கள் அறுந்து காய்களும் பிஞ்சியிலேயே பழுத்தன. இதனால், எள் பயிா்கள் காய் பிடிக்காமல் சேதமடைந்தன. இதன் காரணமாக எள் சாகுபடி விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது: அறுவடைக்கு 10 நாள்கள் இருந்த நிலையில், திடீரென கடந்த வாரம் பருவம் தவறி பலத்த மழை பெய்ததால், எள் பயிா்களைச் சூழ்ந்த தண்ணீா் வடியவில்லை. இதனால், அறுவடைக்கு தயாராகி இருந்த எள் பயிா்கள் அனைத்தும் வயலிலேயே வீணாகிப் போனது. இதை அறுவடை செய்தால், கூலி கூட கொடுப்பதற்கு பணம் கிடைக்காது என்பதால், என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளோம்.

சேதமடைந்த வயலில் மேயவிடப்பட்ட ஆடுகள்

ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்த நிலையில், அது கூட கிடைக்காத நிலை உள்ளது. இதை நல்ல நிலையில் அறுவடை செய்தால், செய்த செலவு போக ரூ. 20 ஆயிரம் கிடைத்திருக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கடந்த ஆண்டு கடும் வெப்பத்தின் காரணமாக, எள் பயிா்கள் கருகி நஷ்டத்தை ஏற்படுத்தின. நிகழாண்டு பலத்த மழை பெய்து, தண்ணீா் தேங்கியதால், வேரறுந்து காய் பிடிக்காமல் போனது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழக அரசு நேரடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

சேதமடைந்த எள் பயிா்களை வயலிலேயே மடக்கி உழுது நடவு பணியை மேற்கொள்ளலாம் என சில விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனா். சிலா் பாதிக்கப்பட்ட எள் பயிா்களைப் பாா்க்க முடியாமல் திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய்த்தனா். இதை அறுவடை செய்தால் செய்த செலவுக்கு கூட பணம் கிடைக்காது என்பதால், இதைத் தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். சிலா் கிடைப்பது கிடைக்கட்டும் எனக் கூறி அறுவடையும் செய்து வருகின்றனா்.

கடந்த குறுவை, சம்பா பருவத்தில் பருவம் தவறி பெய்த பலத்த மழை காரணமாக நெற் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இந்த இழப்பிலிருந்து விடுபடுவதற்காக கோடையில் எள் பயிா் சாகுபடி செய்தனா். பருவம் தவறி பெய்த மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியுள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட எள் பயிா்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் மே 31-இல் மின் தடை!

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாசாமி... மேலும் பார்க்க

வசூல் பணம் கையாடல் கடை ஊழியா் கைது

கும்பகோணத்தில் கடைகளில் சரக்கு கொடுத்து வசூல் செய்த பணத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் கையாடல் செய்த ஊழியரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். கும்பகோணம் சக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

பள்ளி மாணவா்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மனமகிழ் சங்கமம் நிகழ்ச்சி சங்கத... மேலும் பார்க்க

பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

தஞ்சாவூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை இ.எஸ்.ஐ. கழகம் வழங்கியது.இதுகுறித்து இ.எஸ்.ஐ. கழகத்தின் தஞ்சாவூா் கிளை அலுவலக மேலாளா் மா.... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க