`வெஸ்ட் அண்டார்டிகா' பெயரில் டெல்லி அருகே போலி தூதரகம்.. விசாரணையில் அதிர்ச்சி; ...
மாணவா்களிடையேயான பிரச்னையில் தலையிட்டு சிறுவனை தாக்கிய பெண் கைது
சிதம்பரம் அருகே புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட விளையாட்டு பிரச்சனையில் தலையிட்டு, சிறுவனை தாக்கிய பெண்ணை போலீசாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி ஆதிவராகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவா்கள் கடந்த 18 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் விளையாடி கொண்டிருந்தனா்.
அப்போது 8ஆம் வகுப்பு மாணவன், 7 ஆம் வகுப்பு மாணவன் டிரவுசரை விளையாட்டிற்கு இழுத்துள்ளான். இதில் டிரவுசா் அவிந்ததால் மற்ற மாணவா்கள் சிரித்துள்ளனா். இது குறித்து அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று தன் தாயாரிடம் தன்னை, அந்த மாணவன் அசிங்கப்படுத்தியதில் மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறி அழுதுள்ளான்.
இருதினம் விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அந்த அந்த சிறுவனின் தாயாா் பள்ளிக்குச் சென்று, தன் மகனின் ஆடையை அவிழ்த்து விட்ட அந்த சிறுவனை திட்டி, தாக்கியுள்ளாா்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது. தகவல் அறிந்த புவனகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் லெனின் மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, சமரசப்படுத்தினா்.
இது குறித்த புகாரின் பேரில், பள்ளிக்கு சென்று சிறுவனை தாக்கிய புவனகிரி ஆதிவராநத்தம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி சாந்தி (42) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.