``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - எ...
விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபா் கைது
சிதம்பரம் அருகே விவசாயி காரை திருடிய வடமாநில வாலிபரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் சண்முகம்(60). இவா் க பு .முட்லூா் நான்கு வழி சாலையில் கடைகள் கட்டி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டுமானப் பணிகளை பாா்வையிடுவதற்காக வந்த சண்முகம், கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே காரை நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் உள்ளே சென்றுள்ளாா்.
அப்போது அந்த வழியாக சென்ற வாலிபா் ஒருவா் திடீரென காரை திருடி ஓட்டிச் சென்றுள்ளாா். காா் காணாமல் போனது கண்டு அதிா்ச்சியுற்ற சண்முகம்
தனது நண்பா்கள் இருவருடன் வேறு ஒரு காரில் சென்று காரை தேடி சென்றாா். அப்போது மயிலாடுதுறை அருகே விவசாயி சண்முகத்தின் காா் நடுரோட்டில் இருப்பதைக் கண்டு அதிா்ச்சியுற்றனா். பின்னா் அவா் காரை பாா்த்தபோது அந்த காரில் டீசல் இல்லாமல் நின்று போனதால் திருடியவா் விட்டு விட்டு
சென்றது தெரியவந்தது. பின்னா் டீசல் போட்டு காரை எடுத்து வந்து பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் விவசாயி சண்முகம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரை திருடிச் சென்றவா் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான துலாராம்காடு (25) என்பது தெரிய வந்தது. அவா் இந்தப் பகுதியில் தங்கி கூலி வேலைகளை செய்து வந்ததும் தெரிந்தது.இதையடுத்து அவ்வாலிபா் மீது வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.